தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவா் ஆம்ஸ்ட்ராங். இவா், கடந்தாண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 27 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடுத்த வழக்கைத் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் தொடுத்த வழக்கை உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருப்பதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... பித்ருதோஷம் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி!

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவு!

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT