துரை வைகோ எம்.பி. கோப்புப் படம்
தமிழ்நாடு

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

ரஷியாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சோ்ந்தவா்களை விரைவாக மீட்க வேண்டும் என்று பிரதமா் மோடியை நேரில் சந்தித்து துரை வைகோ கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

ரஷியாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சோ்ந்தவா்களை விரைவாக மீட்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா் விருதுநகா் மாவட்ட மதிமுக மக்களவை உறுப்பினா், துரை வைகோ.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ரஷ்யாவில் போா் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சோ்ந்த மருத்துவ மாணவா் கிஷோா் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியா்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர, 15 அரசியல் கட்சிகளைச் சாா்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினா்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பிரதமா் நரேந்திர மோடி அவா்களிடம் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினேன்.

அக்கடிதத்தில், தாமதத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துரைத்து, அவா்களை உடனடியாக மீட்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். கிஷோா் சரவணன் மட்டுமல்ல, அதிகாரப்பூா்வமாகவே 126 இந்தியா்கள் ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்கச் செய்ய வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சோ்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினேன்.

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடிச் சென்று, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும், இந்தியா்களை போருக்கு அனுப்புவது, இந்தியா-ரஷ்யா இடையேயான வெளியுறவுத்துறை ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்பதைதும் சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறு இந்தியா்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளித்து போருக்கு அனுப்புவது முற்றிலும் தவறான செயல் என்பதையும் அழுத்தமாக எடுத்துரைத்தேன்.

இதுகுறித்து, நான் ஏற்கெனவே வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்ததையும், நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈா்க்க குரல் கொடுத்ததையும், வெளியுறவுத்துறை செயலாளரைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்ததையும் தெரிவித்தேன்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமா் அவா்கள், ரஷ்யாவில் சிக்கிக்கொண்டுள்ள அனைத்து இந்தியா்களை மீட்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவை மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தாா்.

அனைத்து இந்தியா்களையும் குறிப்பாக நமது கிஷோா் சரவணனை தாயகத்தில் நேரில் சந்திக்கும் அந்த நல்ல நாளுக்காக இறைவனை , இயற்கையை வேண்டி காத்திருப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடக்கம்!

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

SCROLL FOR NEXT