பள்ளி வாகனங்களை மத்திய அரசு முறையாக ஆய்வு செய்கிறதா? என திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா மாநிலங்களவையில் இன்று (ஆக. 6) கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளி போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை உறுதி செய்யும் சீரான ஒழுங்குமுறை சட்டங்கள் இல்லை என்பது குறித்து திருச்சி சிவா அவையில் கேள்வி எழுப்பினார்.
வாகனங்களின் தரநிலை, ஓட்டுநர் தகுதிகள் மற்றும் பயணிகள் வரம்புகள் குறித்த வரம்புகளை பள்ளிகள் சரியாக பயன்படுத்துகின்றனவா? அதற்கான ஆய்வுகளை மத்திய அரசு முறையாகச் செய்கிறதா? என அவர் கேட்டுள்ளார்.
பள்ளிப் பகுதிகளில் வேகத் தடைகள், அறிவிப்பு பலகைகளை நிறுவுதல் உள்ளிட்ட விரிவான பள்ளிப் பகுதி பாதுகாப்பு தரநிலைகளை மேம்படுத்த இருக்கும் திட்டங்கள் என்ன? எனவும் அவர் கேட்டுள்ளார்.
இதேபோன்று, தொழில்நுட்ப பூங்காக்களை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கு மாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிக்க | நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.