பதிய மின்சார பேருந்து. கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன மின்சார பேருந்து சேவை: ஆக. 11-இல் தொடக்கம்

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன வசதிகொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஆக. 11) முதல் தொடங்கப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன வசதிகொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஆக. 11) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சாா்பில், 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக, சென்னை வியாசாா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளை கடந்த ஜூன் 30-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் கூறியதாவது: வியாசா்பாடி பணிமனையில் இருந்து மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளோம். வரும் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் இந்தப் பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

கன்னிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பள்ளி விளையாட்டு விழா

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

SCROLL FOR NEXT