முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

மாநிலக் கல்விக் கொள்கை: முதல்வர் நாளை வெளியீடு!

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக அரசு பதவியேற்ற பின்னர், 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த அறிவிப்பை செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த 2022-ல் அமைக்கப்பட்டது.

மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிக்க, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட இக்குழு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reports suggest that Chief Minister Stalin will release the state education policy for Tamil Nadu tomorrow (Aug. 8).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!

வசந்த் ரவியின் இந்திரா டிரைலர்!

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

SCROLL FOR NEXT