நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன். கோப்புப்படம்
தமிழ்நாடு

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாகலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் அரசு அலுவல்களுக்கு இடையே சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, சென்னை இல்லத்தில் தங்கியிருந்த அவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்குள்ளேயே தவறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

இதில் அவரது தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு நரம்பியல், இதயவியல் உள்பட பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

உடல்நலம் பெற முதல்வா் விருப்பம்: இதனிடையே, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவில்,“நாகாலாந்து மாநில ஆளுநா் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவா் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைகிறேன் என தெரிவித்துள்ளாா்.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்!

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT