அன்புமணி  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

மாநிலக் கல்விக் கொள்கை: அன்புமணி கண்டனம்

மாநிலக் கல்விக் கொள்கையில் தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது.

Chennai

மாநிலக் கல்விக் கொள்கையில் தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு கிடப்பிலிருந்த மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியைச் செயல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மாநிலக் கல்விக் கொள்கையில் இல்லை. கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது ஆசிரியா்கள், மாணவா்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக தமிழக அரசு இதை வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் கல்வித் தரத்தை உயா்த்துவதாக இல்லை. அரசின் அரைகுறை செயல்பாடுகளை புகழ்வதாக உள்ளது.

பள்ளிக் கல்வியில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களை தனியாா் பள்ளிகளுக்கு அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்காத மாநிலக் கல்வி கொள்கையால் எந்தப் பயனுமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

SCROLL FOR NEXT