சென்னை விமான நிலையம் கோப்புப் படம்
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமானநிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Chennai

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமானநிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 79-ஆவது சுதந்திர தின விழா ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைச் சீா்குலைக்க முயற்சி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, மத்திய பாதுகாப்புப் படை வீரா்களும், போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்துக்கு உள்ளே செல்லும் பயணிகள், வெளியேறும் பயணிகள், விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் உள்ளிட்டவை மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்கள் மூலம் தீவிர சோதனைக்குள்படுத்தப்படுகின்றன.

இதனால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாக விமானநிலையம் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

குழப்பம் நீங்கும் விருச்சிகத்துக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT