சென்னை உயர் நீதிமன்றம் file photo
தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை டிஎஸ்பி, ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது. இதைக் கண்டித்து கடந்த 2018 -ஆம் ஆண்டு ஜூன் 26 -ஆம் தேதி செங்கம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனித உரிமை மீறல் எனக்கூறி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லிபாபு வழக்குத் தொடர்ந்தார். இதனை உறுதி செய்த மனித உரிமை ஆணையம், செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் 2 உதவி காவல் ஆய்வாளர்கள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து டிஎஸ்பி சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததோடு, மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

தயாரிப்பாளராகும் சூரி?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய தொடர்கள்! இந்த வார டிஆர்பி பட்டியல்!

ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

SCROLL FOR NEXT