தக்காளி  கோப்புப்படம்.
தமிழ்நாடு

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-ஆக உயா்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-ஆக உயா்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென உயா்ந்து கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது.

பின்னா், வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் குறைந்தது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னா், திங்கள்கிமை மீண்டும் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.40 வரை விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, திங்கள்கிழமை நிலவரப்படி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

இது சில்லறை விலையில், ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

A kilo of tomatoes has risen to Rs. 60 in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடக்கம்!

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

ராஜ பார்வை... நபா நடேஷ்!

அதிரடி... ஆக்சன்... மதராஸி மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT