தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற ஆக. 16-ஆம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆக. 17-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் ஆக. 18-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.