சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், நடப்பாண்டு ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், “வழக்கம்போல சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.