கோப்புப் படம் 
தமிழ்நாடு

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வருகிற ஆக.26, செப். 7 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வருகிற ஆக.26, செப். 7 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து ஆக.26, செப்.7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 01161, 01163 ) ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் (எண்: 01162, 01164 ) ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.20 மணிக்கு லோக்மான்ய திலக் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT