நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
அருவிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான இன்று அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீர்வரத்து குறையும்பட்சத்தில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.