சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றினார்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்றுகொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கவுள்ளாா்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களுக்கு டாக்டா் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிா் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வா் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவிக்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.