தமிழ்நாடு

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக, தவெக புறக்கணிப்பு; அதிமுக, பாஜக பங்கேற்பு!

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக உள்பட அதன் கூட்டணிக் கட்சிகளும் தவெகவும் பங்கேற்கவில்லை.

இணையதளச் செய்திப் பிரிவு

சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.

இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் இன்பதுரை, பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உள்ளிட்டோரும், பாமகவில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சிவக்குமார், வெங்கடேசன், தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், ஐக்கிய ஜனதா கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை ஆணையர் அருண் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணிக் கட்சிகளும் மற்றும் தமிழக வெற்றிக் கழகமும் புறக்கணித்துள்ளனர். இந்தக் கட்சிகள் சார்பாக யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைப்பட்டா கோரி 2,500 போ் மனு

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் 1,350 போ் பயன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த்திருவிழா

ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 8 போ் கைது

SCROLL FOR NEXT