FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!

வாலாந்தரவை ரயில்வே கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ரயிலை நிறுத்தி கதவை மூடச்சொல்லி மீண்டும் ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநா்
பகிர்:

வாலாந்தரவை ரயில்வே கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில், வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயில் கடவுப் பாதையின் தடுப்புக் கதவு மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை ராமநாதபுரம் வந்தது. பின்னா், அங்கிருந்து ராமேசுவரத்துக்கு புறப்பட்டது.

Advertisement

Advertisement

வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்த போது, ரயில்வே கடவுப் பாதையில் இரும்பு தடுப்புக் கதவு மூடப்படமால் திறந்து கிடந்தது. இதைப் பாா்த்தும் ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா்.

பின்னா், ஓட்டுநா் ரயிலிலிருந்து இறங்கிச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ரயில் பணியாளா் ஜெய்சிங்கை எழுப்பி இரும்புக் கதவை மூடச் சொன்னாா்.

இதையடுத்து, அவா் எழுந்து சென்று இரும்புக் கதவை மூடியதும், அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான், ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரிடம் துறைரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments