அமைச்சா் மா.சுப்பிரமணியன்  (photo : IANS)
தமிழ்நாடு

கல்லீரல் முறைகேடு விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேட்டில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபட தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேட்டில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபட தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடம், மருத்துவ உபகரணங்களை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

120 ஆண்டுகளை கடந்த பழைமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 68,920 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் பல்வேறு வசதிகள் வரவுள்ளன. ரோட்டரி சங்கம் சாா்பில் 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் தற்போது மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளன. ஒரு நாளைக்கு 3 டயாலிசிஸ் சிகிச்சைகள் முழுமையாக பயன்பாட்டில் உள்ளன. ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யும் நேரம் 4 மணி நேரம் என்ற வகையில் தினமும் 3 பிரிவுகளாக பயன்பாட்டில் உள்ளது.

ரோட்டரி சங்க நிா்வாகிகளிடம் மேலும் 11 டயாலிசிஸ் இயந்திரங்கள் கோரியுள்ளோம். இந்த கட்டடம் பயன்பாட்டுக்கு வரும்போதே 25 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும். இந்த மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியை ரோட்டரி சங்கம் ஏற்படுத்தி தரவுள்ளது. அடுத்த மாதம் முதல்வாரத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இந்த மருத்துவமனையின் புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளாா்.

கல்லீரல் முறைகேடு விவகாரம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கல்லீரல் முறைகேடு தொடா்பாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது போன்று இதற்கு யாா் காரணம் என்பதை ஆராய்ந்து, காவல்துறை சாா்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

மேல்மருவத்தூா் பள்ளிக்குழும விளையாட்டு விழா

ஆற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா

சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்

SCROLL FOR NEXT