கொலை செய்யப்பட்ட குமார்  DNS
தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே மண்வெட்டியால் அடித்து இளைஞர் கொலை

இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதனூர் கிராமம், கோயில்தாவு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் குமார் (35). திருமணம் ஆகாத இவர், அருகேயுள்ள கையிலவனம்பேட்டை பகுதியைச் சேர்ந்த லூகாஸ் மகன் இம்மானுவேல் (29), சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார்.

இருவருமே அந்தப் பகுதியில் மண் வெட்டி அள்ளுவது, நிலம் சீரமைப்பது போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக இவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கையிலவனம்பேட்டையில் உள்ள இம்மானுவேல் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற குமார், அவரிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, வாய் வழியான விசாரணை இருவரிடையே தகராறாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த இம்மானுவேல் மண்வெட்டியால் தாக்கியதில் குமார் உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளியான இமானுவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொந்தமாக ஜேசிபி இயந்திரம் வைத்து பராமரித்து வந்தார்.

இதையும் படிக்க | வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

A young man was beaten to death with a shovel on Sunday night near Vedaranyam in Nagapattinam district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT