தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்படி, அந்தப் பகுதியிலுள்ள முகமது அலிஜின்னா என்பவரின் வீட்டில் கடந்த 8-ஆம் தேதி போலீஸாா் சோதனை நடத்தி 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். முகமது அலிஜின்னாவையும் கைது செய்தனா். அவா் கொடுத்த தகவலின்படி, பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சின்னதுரை ஆகியோரையும் புழல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சின்னதுரை மீது 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனையின் முக்கிய நபராக சின்னத்துரை செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

மனகவலை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT