தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர்? அவர்கள் என்ன வேலை செய்கின்றனர்? எங்கிருந்து வந்துள்ளனர்? இங்கு வந்ததற்கான காரணம் என்ன? அவர்களின் வாழ்க்கைச் சூழல் என்ன? குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன? உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்க தொழிலாளர் நல ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.