பாரபத்தி: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று குறிப்பிட்டார் கட்சித் தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கட்சித் தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.
ஒரு எம்பி தொகுதி கூட கிடைக்கவில்லை என்று தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு, கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்துவிட்டது. மத நல்லிணக்கத்துக்கு பெயர்பெற்ற மதுரையில் இருந்து பாஜகவுக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது, தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள் என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு சில கோரிக்கைகள் வைக்கிறேன், நமது தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை தடுக்க கட்சத் தீவை மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வினால் நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. தயவுகூர்ந்து நீட் தேர்வை ரத்து செய்து விடுங்கள். செய்வீர்களா பிரதமர் அவர்களே என்று கேட்டுள்ளார்.
கட்சித் தொடங்க முடியாது என்றார்கள், தொடங்கிவிட்டோம், மாநாடு நடத்த முடியாது என்றார்கள், நடத்திக் காட்டிவிட்டோம். அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா? என்று விஜய் கேள்வி எழுப்பும் வகையில் பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜய், நமக்கு ஒரே கொள்கை எதிரி, ஒரே அரசியல் எதிரி தான் என்றும், நமது கொள்கை எதிரி பாஜக, ஒரே அரசியல் எதிரி திமுகதான்.
கூட்டணி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சி நமது தவெக அல்ல. மாபெரும் இளைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கையில் எந்த சமசரமும் இல்லை. இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும்.
இந்த பாசிச பாஜகவுடனா நேரடி அல்லது மறைமுகக் கூட்டணி வைப்பது? பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? என்று எம்ஜிஆர் பாணியில், கேள்வி கேட்டு பதில் சொல்லும் பாணியில் பேசி வருகிறார் விஜய்.
மேலும், வரும் தேர்தல் ஒரு பக்கம் தவெக, மறுபுறம் திமுக. இவ்விரண்டு கட்சிகளுக்குத்தான் போடடியே. இந்தியாவின் மபரும் சக்தி கொண்ட வெகுஜன மக்கள் படை என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
இதையும் படிக்க.. 2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.