பொறியியல் பணிகள்: புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் 7 நாள்களுக்கு ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்களின் போக்குவரத்தில் பகுதியளவு ரத்து, முழுமையான ரத்து, புறப்படும் இடம் மாற்றம் போன்ற பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில்(வண்டி எண் 66045), ஆகஸ்ட் 30-ஆம் தேதி முண்டியம்பாக்கம் -விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம் -முண்டியம்பாக்கம் இடையே ஜூன் 30-ஆம் தேதி பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), ஆகஸ்ட் 30-ஆம் தேதி சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகியவை ஆகஸ்ட் 24,25,26 ,28,29,30,31 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் எழும்பூர் - புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051) ஆகஸ்ட் 24,31-ஆம் தேதிகளில்சுமார் 15 நிமிஷங்களும், 26-ஆம் தேதி சுமார் 30 நிமிஷங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும். குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் -சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128) , ஆகஸ்ட் 27-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Due to engineering works, it has been announced that the Villupuram–Puducherry passenger train will be completely cancelled for 7 days starting from August 24.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.