திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பெரியார்’, ‘அண்ணா’, ‘கலைஞர்’, ‘பாவேந்தர்’, ‘பேராசிரியர்’, 'மு.க.ஸ்டாலின்' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
திமுக முப்பெரும் விழா, வரும் செப்.17-ஆம் தேதி, கரூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளான பெரியார் விருது திமுக துணைப் பொதுச்செயலாளரும் – திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.
அண்ணா விருது
தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் - பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது.
கலைஞர் விருது
அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் – அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது.
பாவேந்தர் விருது
திமுக மூத்த முன்னோடியும் – தலைமைச் செயற்குழு உறுப்பினரும் – குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.
பேராசிரியர் விருது
கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் - காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் - சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருது வழங்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் விருது
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.