எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை திறந்து வைத்த முதல்வர். 
தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

ரூ.5.10 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்.

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 25) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ. 5.10  கோடி செலவில்  முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிறுவனமானது  திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப கல்வி நுணுக்கங்களையும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள் பல்வேறு விதமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்தருவதாகும்.

இவ்வரசு பொறுப்பேற்றது  முதல் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக ரூ.1.58 கோடி செலவில் இப்பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கம், பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் மின்கலன்கள் போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளதோடு,  மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் அமர்ந்து உணவு அருந்துவதற்காக ரூ.25 லட்சம் செலவில் உணவு அருந்தும் அறையும் அமைக்கப்பட்டது.

மேலும், இந்நிறுவனத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் மாணவர் கல்வி நலன் கருதி பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களின் நலன் கருதி இறுதித் திட்ட குறும்படப் படப்பிடிப்பு தயாரிப்புச் செலவினம் ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 1 லட்சம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நிறுவனத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன்கருதியும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பின்படி,  தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில்  ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை ஆகியவை இணைந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய சுமார் 17,517 சதுர அடி படப்பிடிப்புத்தளம், பழைய மாணவர் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளிர்சாதனக் கருவிகள், இரண்டு புதிய மின்மாற்றிகள் (11 kv HT 500 KVA- Transformers)  மற்றும்  இதர மின் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை ரூ. 5.10  கோடி செலவில்  முழு அளவில் புனரமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் இன்றைய நாள் திறந்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister M.K. Stalin today (Aug. 25) inaugurated the fully renovated air-conditioned shooting set at the Tamil Nadu Government MGR Film and Television Training Institute premises in Taramani, Chennai, through video conferencing at the Secretariat. The set was built at a cost of Rs. 5.10 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

மயானம் அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து கிராம மக்கள் மனு அளிப்பு

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காரிமங்கலம் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT