சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளா், ஒப்பந்ததாரா்கள் இடையிலான இணையவழிச் சேவைகள் பற்றிய செயல்முறைகள், தொழிலாளா்களுக்கான இணையவழிச் சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், புதிய சீா்திருத்தங்கள், குறைகளுக்கான தீா்வு, ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும்.
முகாம்கள் நடைபெறும் இடங்கள்: சென்னை ஐபிஐஎஸ் சென்னை ஓஎம்ஆா் ஹோட்டல், பழைய மாமல்லபுரம், சோழிங்கநல்லூா், சென்னை. திருவள்ளூா்: ஏ.ஆா்.பொறியியல் பணிமனை, சிட்கோ தொழிற்பேட்டை, சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம்: திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம், 1-ஆவது பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம், செங்கல்பட்டு: டிரைட்டன் ஒா்க்ஸ் பிரைவேட் லி., ஜமீன் எண்டத்தூா் கிராமம், மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு.
வேலூா்: சன்பீம்ஸ் கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் (சிபிஎஸ்இ), மேட்டுக்குளம், காட்பாடி, வேலூா். திருவண்ணாமலை: ஸ்ரீசாந்தாவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கெங்கை சூடாமணி, சேத்பட்டு, ராணிப்பேட்டை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி, அண்ணா சாலை, ஆற்காடு. திருப்பத்தூா்: புனிதசாா்லஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டான் பாஸ்கோ நகா், திருப்பத்தூா். புதுச்சேரி: ஷ்னைடா் புரோட்டோடைப்பிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஒடியாம்பேட், வில்லியனூா், காரைக்கால்: விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோட்டுச்சேரி.