தமிழ்நாடு

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘ஞானம், நல்லொழுக்கத்தின் அடையாளமாக பகவான் ஸ்ரீ விநாயகா் வழிபடப்படுகிறாா். தடைகளைத் தகா்க்கவும், நல்லதொரு தொடக்கத்தை வேண்டியும் நாம் அவரை வணங்குகிறோம். புதிய இலக்குகளுடன், நோ்மறையான உத்வேகத்துடனும் அனைவரும் பயணிக்க இந்த விழா நம்மை வழி நடத்துகிறது.

இந்த நன்னாளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், தூய்மையான, பசுமையான, வளமான தேசத்தைக் கட்டமைக்கும் நோக்குடனும் கொண்டாட வேண்டும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியா்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT