முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரியில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட், 2025 at 8:25 AM
ஆரஞ்சு எச்சரிக்கை
பகிர்:

நீலகிரியில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* நேற்று (27-08-2025) ஒரிசா கடலோரப் பகுதிகளில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-08-2025) காலை 5.30 மணி அளவில் தெற்கு ஒரிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, காலை 8.30 மணியளவில் சட்டீஸ்கர் பகுதிகளில் நிலவுகிறது.

* தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஆக. 28ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை..

ஆக. 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

28-08-2025 முதல் 30-08-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

summary

The Meteorological Department has stated that there is a possibility of heavy to very heavy rain in the Nilgiris.

முழு கட்டுரையைப் படிக்க →