சென்னை உயர் நீதிமன்றம் 
தமிழ்நாடு

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி ரத்து!

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து வழக்குத் தொடர அக்கட்சியின் தொண்டர்களுக்கு அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து, அக்கட்சியின் தொண்டர்களான வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர், உரிமையியல் வழக்குத் தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்குரைஞர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்தது, அதிமுகவின் சட்டத் திட்டங்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து, இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் அமர்வு, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து, அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாம் திரைப்பட டிரைலர்!

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

தீயணைப்புத் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்!

எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT