கோவை ரயில் நிலையம்.  
தமிழ்நாடு

கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த 15 வயது சிறுவன் கைது

கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கோவை போத்தனூர் – இருகூர் இடையே சென்ற சரக்கு ரயில் இன்ஜின் பெட்டியின் கண்ணாடி மீது கல்லெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. சம்பவத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் சிறுவன் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ரயில் மீது கல்லெறிந்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான்.

சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு

பின்னர் அச்சிறுவன் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறுவனை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். அங்கு சிறுவனுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளும், படிப்பைத் தொடரும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A 15-year-old boy has been arrested near Coimbatore in connection with a case of stone-throwing at a train.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

ஆரணி, தேவிகாபுரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT