தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.
இதில் நடுமாடு, கரிச்சான் சிட்டு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
நூற்றுக்கும் அதிகமான ஜோடி மாடுகளுடன் கலந்து கொண்டனர். கோம்பை முதல் உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கு வரையில் சென்று திரும்புவகையில், எல்லை பந்தயம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் குளறுபடி: தேவாரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தைய போட்டி, திடீரென கோம்பைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. போட்டியில் கலந்துகொண்ட மாடுகளுக்கு பின்னால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியபடி மாடுகளை பந்தயத்தில் வேகமாக செல்ல வைத்தனர். இதனால் பல இடங்களில் மாடுகள் தங்கள் வழிதவறி சாலை ஓரத்துக்கு சென்றனர் .
இதில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்கள் முறைகேடு செய்ததாக பிற மாட்டின் உரிமையாளர்கள் விழாக் குழுவினரிடம் புகார் தெரிவித்தனர்.
இதற்கு போட்டி விதிகளை மீறும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது என விழாக் குழுவின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.