சென்னையில் மேகக்கூட்டம் திரளுவதால் மழை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “சென்னையிலும் திருவள்ளூரிலும் சிறு இடைவெளிக்குப் பின் கனமழைப்பொழிவு மீண்டும் திரும்பியுள்ளது. பொன்னேரி, கவரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்கிறது.
புதிதாக மேகக்கூட்டம் வலுவடைந்து வருவதால், சென்னையின் பிற பகுதிகளிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் மழைப்பொழிவு 200 மி.மீ.-க்கும் மேல் பதிவாக அதிக வாய்ப்புள்ளது.
மேற்கண்ட கனமழைப்பொழிவானது ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட மழையின் அளவு இன்று அதிகரித்துள்ளது.
நாளை(டிச. 1), மேகக்கூட்டம் சென்னையையொட்டி மேலும் நெருக்கமாக நகரும் என்பதால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் கனமழை இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.