தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், மேகக் கூட்டங்கள் ஈர்க்கப்படுவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வந்தாலும், முற்பகல் முதல் பலத்த மழை மெல்ல கனமழையாக அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தொடங்கியதிலிருந்ததே, இன்று காலை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், மழை பெய்யாத நாள்களில் இரவே விடுமுறை அறிவிப்பு வெளியாகிவிடும் நிலையில், இன்று காலை கனமழை பெய்யத் தொடங்கியபோதும், விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை.
பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் ஏமாற்றத்துடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றனர். காலையில் மிதமான மழையாக இருந்த நிலையில் தற்போது கனமழையாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் மாலையில் வீடு திரும்பும்போது சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்பதால் பள்ளிகள் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டால், அலுவலகம் செல்வோர், பிள்ளைகளை அழைத்து வருவதிலும், தனியார் வாகனங்களை அமர்த்தியிருப்பவர்கள், பிள்ளைகளை உடனடியாக அழைத்து வருவதிலும் சிரமம் ஏற்படலாம் என்பதால் அரைநாள் விடுமுறை விடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
புயல் வலுவிழந்த போதும் மேகக் கூட்டங்களை ஈர்த்து வருவதால் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. தாழ்வான இடங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. சென்னை பெரம்பூரில் முரசொலி மாறன் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் நிலையில், இது 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை நீடிக்கும்!
Advertisement2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.