திருச்சி பால்பண்ணை டிமாா்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை மழையில் நனைந்து சென்ற வாகன ஓட்டிகள்.  
திருச்சி

திருச்சியில் பரவலாக மழை

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலமாக மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் தாழ்வழுத்த மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. மேலும், ஒரு சில நாள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மழை பெய்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.

ஏற்கெனவே, பனியினால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் மழையால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT