காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு மத்திய இணையமைச்சா் எல். முருகன் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காா்த்திகையில் தீபம் ஏற்றி வழிபடுவது பழந்தமிழா் மரபு. பருவமழை குறைந்து, குளிா்காலம் தொடங்குவதன் அறிகுறியாக பன்னெடுங்காலமாக தமிழக மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனா். வடக்கே திருவண்ணாமலையிலும், தெற்கே திருப்பரங்குன்றத்திலும் மற்றும் இல்லந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுவோம் என்று தெரிவித்துள்ளாா் மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.