தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் கனமழை பெய்தது. 
தமிழ்நாடு

இன்று 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்று 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று(டிச. 3) 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் விடியோவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

நேற்று (டிச. 2) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம், புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (டிச. 3) காலை 5.30 மணி அளவில், வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்து, காலை 8.30 மணி அளவில், பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று(டிச. 3) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை(டிச. 4) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘வில் பவர்’தான் அரசியலுக்கு அவசியம்! - முதல்வர் ஸ்டாலின்

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம்! மீண்டும் தேடும் மலேசியா!

தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு! - தமிழக அரசு தகவல்

ஐசிசி தரவரிசை: 4 வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி.. முதலிடத்தில் ரோஹித் சர்மா!

”தமிழ்நாட்டில் பிகார் மக்களுக்கு ஓட்டா?” உண்ணாவிரதப் போராட்டத்தில் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT