புதுச்சேரியில் சாலை வலம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெக சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் நெரிசல் பலி சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் சாலை வலம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் கல்லூரி ஒன்றில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் விஜய் சாலைவலம் செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வரை பலமுறை நேரில் சந்தித்தும் சாலை வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வருகிற டிச. 9 ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.