தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். 
செய்திகள்

சேலத்தில் பிப். 13-ல் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: தவெகவினர் மீண்டும் மனு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரியிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவினர் மீண்டும் அனுமதி கோரியுள்ளனர்.

கரூரில் நடந்த பிரசாரத்தின்போது பெண்கள், குழந்தைகள் என 41போ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, பிரசார பயணத்தை நடிகர் விஜய் ரத்து செய்தார்.

இதனிடையே, கடந்த நவம்பா் மாதம் சேலத்தில் இருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதுடன், கூட்டம் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் தவெக நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர்.

ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் கார்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனு அளித்திருந்தார். இந்த மனு காவல் துறை பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில், மகுடஞ்சாவடி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு மீண்டும் அனுமதி கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 5 ஆயிரம் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி திடல் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

After permission was denied for TVK leader Vijay's campaign in Salem, TVK members have requested permission again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் டி20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

தொடர் வெற்றிகள்.. டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த இந்திய அணி!

விராட் கோலி சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

குரூப்-2, 2ஏ தேர்வில் குளறுபடி! தமிழ்நாடு முழுவதும் முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைப்பு!!

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்... ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT