சேலத்தில் விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி! நிபந்தனைகள் என்னென்ன?
சேலத்தில் நடைபெறவுள்ள விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் தவெக நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர்.
ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் கார்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனு அளித்திருந்தார். இந்த மனு காவல் துறை பரிசீலனையில் இருந்தது.
இதனிடையே, சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு, சேலம் மாநகர காவல் ஆணையரிடம் தவெக நிர்வாகிகள் மீண்டும் மனு அளித்தனர்.
அந்த மனுவில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 5 ஆயிரம் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தை பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த, சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
5000 பேருக்கு மேல் பங்கேற்க மாட்டார்கள் என தவெகவினர் உத்தரவாதம் அளித்த நிலையில், காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் கருவுற்றப் பெண்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது, அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சேலம் மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வரும் பிப். 13 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
According to reports, the Salem City Police have granted permission, with several conditions, for the election campaign meeting in Salem where Tamilaga Vetri Kazhagam leader Vijay will be participating.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.