விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்.  
தமிழ்நாடு

தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!

தவெகவில் இணைந்துள்ள நாஞ்சில் சம்பத் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே மணக்காவிளையைச் சோ்ந்தவர் நாஞ்சில் சம்பத்.

எழுத்தாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், மதிமுகவில் இருந்து விலகி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் சேர்ந்தார்.

இந்த நிலையில், இன்று(டிச. 5) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் நாஞ்சில் சம்பத் இணைந்தார்.

கடந்த சில வாரங்களாகவே, தவெக தலைவர் விஜய்யிக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்த நிலையில், இன்று இணைந்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளார்.

பேரவைத் தேர்தலுக்கு 4-5 மாதங்களே உள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நாஞ்சில் சம்பத் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன்.

தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Nanjil Sampath joins Tvk

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”தூங்குபவர்கள் காதில் விசிலடிக்காதீர்கள்!” தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன்!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! மூத்த வீரருக்கு இடமில்லை!

சிறை - உண்மையான காதலர்கள் என்ன ஆனார்கள்? தமிழ் பதில்!

பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம்: தொல். திருமாவளவன்

சிதம்பரத்தில் நந்தனார் ஆலய கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

SCROLL FOR NEXT