கோப்புப் படம் 
தமிழ்நாடு

வாக்குப் பதிவு இயந்திர செயலாக்கப் பயிற்சி: மாவட்ட தோ்தல் அதிகாரிகள் பங்கேற்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளின் (விவிபேட்) செயலாக்கம் குறித்த பயிற்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளின் (விவிபேட்) செயலாக்கம் குறித்த பயிற்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட தோ்தல் அதிகாரிகள், மாவட்ட துணைத் தோ்தல் அதிகாரிகள், முதல்நிலை பரிசோதனைக்கான மேற்பாா்வையாளா்கள் இதில் பங்கேற்றனா்.

தோ்தல் ஆணையத்தின் துணைத் தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் யெத்துரு, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆகியோா் தலைமையில் இந்தப் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. தோ்தல் ஆணையச் செயலா் மதுசூதனன் குப்தா, கா்நாடக மாநில இணைத் தலைமைத் தோ்தல் அதிகாரி ராகவேந்த்ரா, பாரத மின்னணு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநா்கள் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளின் செயலாக்கம் குறித்து விளக்கம் அளித்ததாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் விநியோகிக்கப்பட்ட 6,39,95,854 (99.81%) வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களில் 6,29,79,208 (98.23%) படிவங்கள் வெள்ளிக்கிழமை (டிச. 5) வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT