தஞ்சை: கார்த்திகை தீபம் காவி தீபமாக மாறிவிடக்கூடாது, அதில் தமிழக அரசு கவனமாக இருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், சட்டத்தின்படி எந்த நெறிமுறைகள் இருந்ததோ அதை முதலமைச்சர் செயல்படுத்தினார்.
தமிழகத்தில் மக்களிடையே, ஆன்மிகம் என்ற பெயரால் மதத்தின் பெயரில் ஒரு தீயை உருவாக்க நினைத்ததை தமிழக முதல்வர் முறியடித்துள்ளார்.
அதன்படியே மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களும் செயல்பட்டனர். கார்த்திகை தீபம் காவி தீபமாக மாறிவிடக்கூடாது, அதுதான் தமிழக அரசு கவனமாக இருக்கிறது. கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாது. மதத்தின் பெயரால் பிரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளார் தமிழக முதல்வர்.
கும்பகோணம் கலைஞர் பெயர் கொண்ட பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என்ற சட்ட தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் கால நீடிப்பு செய்கிறார். குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநரால் இழைக்கப்படுகின்ற அநீதியை எடுத்துக் கூற திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் கூறிய பிறகும் மனம் திருந்தாத நிலையில் இருக்கின்ற ஆளுநர் பற்றி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேச இருக்கிறார்கள். விரைந்து கலைஞர் பெயரால் பல்கலைக்கழகம் அமைக்கவும், தமிழக உரிமைகளை மீட்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.