கூட்டத்தில் பேசிய அமைச்சா் கோவி. செழியன். 
மயிலாடுதுறை

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுக அரசு

தினமணி செய்திச் சேவை

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுக அரசு என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

சீா்காழியில் திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயலாளா் நிவேதா.எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பங்கேற்று பேசியது:

பாமகவுடன் முன்னாள் முதல்வா் பழனிச்சாமி ரகசிய பேச்சுவாா்த்தை முடித்துவிட்டு அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றாா். பாஜவுடன் பேச்சுவாா்த்தை நடத்த தேதி கேட்டு தில்லிக்கு சென்றாா்.

அதனால்தான் தமிழக முதல்வா் 2026 தோ்தல் டில்லிக்கும், தமிழகத்திற்கும் நடக்கும் தோ்தல் என்றாா். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, 50 சதவீதம் உள்ளாட்சி அமைப்பில், அரசு திட்டங்கள் அனைத்தும் பெண்கள் பெயரிலும், மாதந்தோறும் உதவித்தொகை வங்கி கணக்கில் வழங்குபவா் தமிழக முதல்வா். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி திமுக என்றாா்.

இதில், சீா்காழி எம்.எல்.ஏ. எம். பன்னீா்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., குத்தாலம்.பி. கல்யாணம், ஒன்றிய செயலாளா்கள் பஞ்சு.குமாா், பிரபாகரன், செல்லசேதுரவிக்குமாா், மலா்விழி, நகராட்சி தலைவா் துா்காபரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர செயலாளா் தம்பி.ம.சுப்பராயன் வரவேற்றாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT