திமுக எம்.பி. கனிமொழி கோப்புப் படம்
தமிழ்நாடு

அயோத்திபோல தமிழ்நாடு? பாஜகவுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதில்

இணையதளச் செய்திப் பிரிவு

அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார்.

அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், அவருக்கு பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் ``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?

கடந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் - பாஜகவை படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?

கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ``அயோத்தி இந்தியாவில்தானே இருக்கிறது. அயோத்தி ஒன்னும் இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லையே... இந்தியாவில்தான் உள்ளது.

தமிழ்நாடு அயோத்தி போல வருவதில் தவறில்லை. ராமர் ஆட்சி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி ராமர் ஆட்சிபோல வர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: அயோத்திபோல தமிழ்நாடு வருவதில் தவறில்லை! - நயினார் நாகேந்திரன் பேச்சு

Kanimozhi MP replies to Nainar Nagenthiran's Tamilnadu becoming like Ayodhya remark

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் பேருந்து மீது கார் மோதல்: காயமின்றி தப்பிய பிரபல நடிகர்

மரகதப் பச்சை... ரிங்கு ராஜ்குரு!

தவெக பொதுக்கூட்டம்! புதுச்சேரி அரசின் நிபந்தனைகள்!

தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி!

கடின உழைப்பின் அடையாளம்... 23 ஆண்டுகளுக்குப் பிறகான ரேஸிங் அனுபவம் பகிர்ந்த அஜித்!

SCROLL FOR NEXT