சென்னை: கடந்த வார இறுதியில் தொடங்கி, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், பிறகு வட மாவட்டங்கள் என சுற்றிப் போட்டு மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இதுவரை இல்லாத வகையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாள்கள் பரவலாக மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை ஏமாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த வானிலை நிபுணர்களுக்கு நிம்மதியை தந்தது டிட்வா புயல்.
இந்த நிலையில், இன்றைய நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னை உள்பட ஒட்டுமொத்த வட தமிழக மாவட்டங்களிலும் இன்று சூரிய வெளிச்சம் வந்துள்ளது. அனைத்து மேகங்களும் சுத்தமாக துடைத்து பெரும்பாலான தமிழகப் பகுதிகளில் இன்று மழைக்கு விடுமுறை.
சென்னைக்கு அடுத்த மழை என்றால் டிச. 16 அல்லது 17 வரை காத்திருக்க வேண்டும். இது நமக்கு மிகப்பெரிய இடைவேளையாகவே இருக்கும்.
ஆனால் டெல்டா பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். நாகைக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.