இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) கன்னியாகுமரி, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு
summary