தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 
தமிழ்நாடு

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தோ்வு: விடைத்தாள்கள் பதிவிறக்கம் செய்யலாம்

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தோ்வு விடைத்தாள்களை 2026, டிச. 7 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தோ்வு விடைத்தாள்களை 2026, டிச. 7 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2022, ஜூலை 2 -ஆம் தேதி முற்பகல், பிற்பகல் என இரு வேளைகளிலும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்கான ஓ.எம்.ஆா்., முறையிலான விடைத்தாள்கள் தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தோ்வா்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி 2026, டிச. 7 வரை விடைத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT