தவெக ஆனந்த் 
தமிழ்நாடு

ஒரு மணி நேரமாகியும் வாகனத்துக்குள்ளேயே இருந்த விஜய்! மக்களிடையே பேசும் ஆனந்த்

ஒரு மணி நேரமாகியும் வாகனத்துக்குள்ளேயே விஜய் இருந்த நிலையில், மக்களிடையே ஆனந்த் பேசினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் தவெக மக்கள் கூட்டம் தொடங்கியது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உரையாற்றினார்.

போதிய கூட்டம் இல்லாததால் பாஸ் வைத்திருக்காதவர்களும் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது. காவல்துறையினர், கூட்டம் அதிகரித்து வருவதால் விஜயை உடனடியாகப் பேச அழைத்துள்ளனர்.

கூட்டத் திடலுக்கு விஜய் இருக்கும் வாகனம் வந்துவிட்டது. ஒரு மணி நேரமாகியும் விஜய் பேச வரவில்லை. முதலில், தவெக பொதுச் செயலர் ஆனந்த் பிரசார வாகனத்தில் பேசத் தொடங்கினார்.

அவர் பேசுகையில், ஒத்துழைப்பு தந்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இத்தனை பேர் இங்கே திரண்டிருப்பதைப் பார்க்கும்போது புதுச்சேரியிலும் தவெக ஆட்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக கூட்டம் என்றால் எல்லாவற்றுக்கும் பிரச்னைதான். அதனால்தான் பல விதிமுறைகளை விதித்தோம். இத்தனை விதிகளை விதித்திருந்தாலும் இவ்வளவு பேர் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஆனந்த் கூறினார்.

காற்றை நிறுத்த முடியுமா?

பொதுச் செயலர் ஆனந்தைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா பேசத் தொடங்கினார்.

அவர் பேசுகையில், தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரிக்கும் சேர்த்து விஜய் பல திட்டங்களை வைத்துள்ளார். புதுச்சேரி காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர், புதுச்சேரியைப் பார்த்து சட்டம் ஒழுங்கை கற்றுக் கொள்ள வேண்டும். காற்றை நிறுத்த முடியுமா? வெள்ளத்தை நிறுத்த முடியுமா? தவெகவையும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT