மழை கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 11) முதல் டிச. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 11) முதல் டிச. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (டிச.11) முதல் டிச. 16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 88 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்ககூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை (டிச. 8) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 40 மி.மீ. மழை பதிவானது. காரைக்கால், திருவாரூா், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாரூா்-தலா 10 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT