மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் X
தமிழ்நாடு

எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் திமுக தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச் சாவடி’ கூட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

தனது வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதல்வர் நிர்ணயித்துக் கொடுத்தார்.

திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளனர். இந்த குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம் பெறுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?

டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!

தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!" என்று பதிவிட்டுள்ளார்.

CM M.K. Stalin attended DMK polling booth meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: இலங்கைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

பெண்களையும் இளைஞர்களையும் நம்புகிறேன்: மு.க. ஸ்டாலின்

மோகன்லால் - 367 திரைப்பட இயக்குநர் அறிவிப்பு!

ஆன்மிக தொடரில் அறிமுகமாகும் விஜய் - அஜித் பட நாயகி!

திமுக மகளிரணி மாநாடு தொடங்கியது!

SCROLL FOR NEXT